கேரளாவில் இருந்து வந்தவர்தான் என்றாலும் தமிழ் சினிமாவுக்காக பாடுவது, நடிப்பது என்று மலையாள சினிமாவை மறந்து இங்கேயே தங்கிவிட்டவர்தான் ஆண்ட்ரியா சேச்சி. ஆனால் சொந்த ஊரில் பலமுறை நடிக்க அழைத்தும் போகாமல் இருந்தவர், போனால் போகிறதென்று முதன்முதலாக பஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத்தில் ‘அன்னயும் ரசூலும்’ என்கிற படத்தில் நடித்தார். படமும் சூப்பர்ஹிட்டுதான்.
ஆனால் படத்தில் நடித்த ஹீரோ பஹத் பாசிலோ அந்த ஊர் காதல் இளவரசன் என்பதால் ஆண்ட்ரியாவுக்கு லவ் அப்ளிகேஷன் போட்டார்.. அதோடு மட்டுமல்ல அப்ளிகேஷன் போட்ட விஷயத்தையும் ஊரை கூட்டி அறிவித்தார். இதனால் பயந்துபோன சேச்சி, கொஞ்சநாள் மலையாளத்துக்கு லீவு விட்டார்.
அந்த காதல் இளவரசன், அடுத்து நஸ்ரியாவுடன் நடித்து, அவரை காதலித்து, கல்யாணமும் செய்துகொண்ட பின்னாடி தான் நிம்மதி பெருமூச்சு விட்டார். அதையடுத்து ‘பிருத்விராஜூடன் நடிக்க வாய்ப்பு வரவே அதை தவிர்க்க மனம் இல்லாமல் நடித்தார். அவ்வளவுதான்.. அதற்கப்புறம் மலையாள சினிமா பக்கம் பார்வையை திருப்பவே இல்லை.
தமிழைவிட அங்கே சம்பளம் குறைச்சல் என்பதும் ஒரு காரணம் தான். அதனால் தான் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து, கடைசி நேரத்தில் நடிக்கவில்லை. தற்போதுகூட மோகன்லாலுடன் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் தொடங்கினால் தான் அது கூட உறுதியாகும்.
இந்த நேரத்தில்தான் லால் ஜோஸ் என்கிற இயக்குனர், தான் இயக்கிவரும் படத்தில் நடிப்பதற்காக ஆண்ட்ரியாவிடம் கதை சொன்னார். இயக்குனர் மேல் மரியாதை வைத்திருந்த சேச்சிக்கு அவர் சொன்ன கதையும் ரொம்பவே பிடித்துவிட்டது.
ஆனால் அக்ரிமெண்ட் போடும் முன் லால்ஜோஸ் போட்ட முக்கிய கண்டிசன் படத்தின் கேரக்டருக்காக ஆண்ட்ரியா தனது கூந்தலை பாதியாக வெட்டிவிடவேண்டும் என்பதுதான். ஆனால் ஆண்ட்ரியாவோ “நடிப்புக்காக உயிரை கொடுப்பேன்.. ஆனால் ம..ரை கொடுக்கமாட்டேன்” என முடியை வெட்ட மறுத்து இயக்குனருக்கு பெரிதாக கும்பிடு போட்டு அனுப்பிவிட்டாராம்..