சமந்தாவுக்கு கைகொடுக்க தயாராகும் அனிருத்


சமீபத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் வெளியானது.. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்றபோதே எதிர்பார்ப்பு அதிகமாகியது, அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்த ‘கல்யாண வயசுதான் வந்துடுச்சே’ என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது.

இந்தநிலையில் சமந்தாவும் கதையின் நாயகியாக ‘யு டர்ன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.. இந்தப்படத்தில் பாடல்கள் ஏதும் இல்லாததால், அனிருத்தை வைத்து ஒரு புரோமோ பாடலை உருவாக்கி அதன்மூலம் படத்தை விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளாராம். இந்தப்பாடலுக்காக அனிருத்துக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.