அஞ்சான் படத்தை உலகெங்கும் இருக்கும் சூர்யாவின் ரசிகர்கள் நாளை பார்த்து ரசிக்கப்போகிறார்கள். இத்தனை நாட்களாக அஞ்சான் படத்தில் இரண்டு சூர்யா என்று அனைவரிடமும் கூவி கூவி அறிவித்துக் கொண்டிருந்த அஞ்சான் படக்குழு, தற்போது கப்சிப் ஆகியுள்ளது. காரணம், ஒரு தெலுங்கு விநியோகஸ்தர் வெளியிட்ட அறிவிப்பால். தெலுங்கில் ‘சிக்கிந்தர்’ என்ற பெயரில் அஞ்சான் ரிலீசாகிறது, இந்த படத்தை தெலுங்கில் வெளியிடும் ஒரு விநியோகஸ்தர் அஞ்சான் படம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
‘ரஜினியின் பாட்ஷா, சூர்யாவின் கஜினி இரண்டும் சேர்ந்த கலவைதான் இந்த அஞ்சான். இதில் இரண்டு வேடங்களில் சூர்யா நடிப்பதாக தவறான தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. முதல் பாதி பாட்ஷா படம் போன்று மும்பை தாதாவாகவும், இரண்டாம் பாதி கஜினி படத்தைபோல் வில்லனை தேடி அலைவதுமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவின் அறிமுக காட்சி, பக்காவான இண்டர்வெல், சரியான முடிவு என லிங்குசாமி பட்டையை கிளப்பியிருக்கிறார்’ என்று பேட்டியளித்துவிட்டார்.
இதனை கேள்விப்பட்ட லிங்கு இப்படி சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து இப்படி வெட்ட வெளிச்சமாக்கிட்டாரே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்..