இந்தியில் எந்தப்படம் ஹிட் ஆனாலும் தனது மகன் பிரசாந்த்துக்கு செட் ஆகும் என தெரிந்தால் முதல் ஆளாக ஓடிச்சென்று அதன் தமிழ் ரீமேக் ரைட்ஸை உடனே கைப்பற்றுவதில் வல்லவர் அவரது தந்தை நடிகர் தியாகராஜன். தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு ரீ-மேக்கில் பிரசாந்த் நடித்து வந்தாலும் கடந்த சில வருடங்களில் வெளியான அவரது படங்கள் பெரிய அளவில் போகவில்லை.
இந்த நிலையில்தான் தற்போது கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்று மூன்று தேசிய விருதுகளை அள்ளிய அந்தாதுன் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை கைப்பற்றியுள்ளார் தியாகராஜன். இந்தப்படத்திற்கு அந்தகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய பிரெட்ரிக் தான், இந்தப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்தப்படத்தில் இருந்து தான் வெளியேறி விட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரெட்ரிக். ஆனால் காரணம் என எதையும் அவர் குறிப்பிடவில்லை. தற்போது இந்தப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.
அதேசமயம், இதற்கு முன்னதாக பிரசாந்த் படங்களில் இதுபோல சில சமயங்களில் நடந்திருப்பதால், வழக்கம்போல அப்பா, மகன் இருவரின் தலையீடும் டார்ச்சரும் தாங்க முடியாமல் தான் இவரும் வெளியேறி இருக்கலாம் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது..