பொதுமேடைகளில் பேசும்போது நாகரிகமாக பேசவேண்டும்.. காமெடி என்கிற பெயரில் கண்டதையும் பேசி, மற்றவரை புண்படுத்தி, தானும் கண்டனங்களை வாங்கி கட்டிக்கொள்ள கூடாது என்பதற்கு உதாரணமாக ஐதராபாத்தில் நடைபெற்ற ஆடியோ ரிலீஸ் விழாவில் நடந்த சம்பவத்தை குறிப்பிடலாம்.
தெலுங்குத் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் அலி. சமீபத்தில் வெளிவந்த புலி திரைப்படத்தில் சித்திரக் குள்ளர்களின் தலைவனாகவும் நடித்திருந்தார். எந்த ஒரு திரைப்பட விழாவிலும் ஏதாவது ஆபாசமாகப் பேசி சர்ச்சையைக் கிளப்புவதுதான் இவரது முக்கியமான வேலை. அப்படித்தான் சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற சைஸ் ஜீரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்காவின் தொடையைப் பற்றி தேவையில்லாமல் ஆபாசமாக பேசியுள்ளார்.
படத்தில் இன்னொரு நாயகியான சொனால் சௌகானுக்கு தொடையே இல்லை. அனுஷ்காதான் அழகான தொடைகளை வைத்திருக்கிறார். பில்லா படத்தில் அனுஷ்காவைப் பார்த்ததிலிருந்து நான் அவரின் ரசிகனாகிவிட்டேன். அவருடைய தொடை ஜிலேபி போல இருக்கிறது. தெலுங்கு ரசிகர்களுக்கு ஜிலேபி என்றால் மிகவும் பிடிக்கும்.” என அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பெயுள்ளார்.
அதுமட்டுமல்ல, போகிறபோக்கில், “என்னை விட ஹீரோயின்களின் தொடையைப் பற்றி அதிகம் தெரிந்தவர் இயக்குனர் ராகவேந்திரராவ்தான்,” என தேவையில்லாமல் மூத்த இயக்குனர் ஒருவரையும் கோர்த்துவிட்டு பேசியிருக்கிறார். அலியின் இந்தப் பேச்சு பற்றி நிகழ்ச்சி முடிந்ததும் பலரும் அவரைத் திட்டி தீர்த்துவிட்டார்கள். சினிமா ரசிகர்களிடமும் இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.