மணிரத்னம் மேல் கோபம் தீராத அரவிந்த்சாமி..!


தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி வளர்த்து ஆளாக்கி விட்டவர் தான் இயக்குனர் மணிரத்னம் என்றாலும் அவர்மீது கடந்த ஒரு வருடத்திற்கு மேல் கோபமாக இருக்கிறாராம் அரவிந்த்சாமி.. இத்தனைக்கும் சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகிப்போயிருந்த அரவிந்தசாமியை மீண்டும் ‘கடல்’ படம் மூலம் அழைத்து வந்து ரீ என்ட்ரி போட்டுத்தந்தவரும் மணிரத்னம் தானே.. பின் ஏன் அரவிந்த்சாமி தனது குருநாதர் மேல் கோபமாக இருக்கிறாராம்..?

காரணம் இது தான் கடந்த 2015ல் அரவிந்த்சாமி வில்லனாக பட்டையை கிளப்பிய ‘தனி ஒருவன்’ படம் வெளியானது இல்லையா..? ஊர் உலகத்தில் உள்ள தெரிந்தவர் தெரியாதவர்கள் எல்லாம் இந்தப்படத்தை பார்த்து அரவிந்தசாமியை போதும் போதும் என்கிற அளவுக்கு பாராட்டி தள்ளிவிட்டார்கள்..

ஆனால் மணிரத்னமோ இந்த செய்தியை நீங்கள் படிக்கும் இந்த நேரம் வரை அந்தப்படத்தை பார்க்கவே இல்லையாம். கலெக்டர் அர்ஜுனாக அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி சித்தார்த்த அபிமன்யூவாக கலக்கியிருப்பதன் மூலம் எந்தவிதமாக உருமாறியுள்ளார் என்பதி பார்க்காமல் இருப்பது ஆச்சர்யம் தான்.

ஆனால் இதை மணிரத்னமே சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டவர், அந்த படத்தை பார்க்கனும்னு நெனைக்கிறேன்.. வேலை பளுவுல இன்னும் பாக்க முடியல.. சீக்கிரமே பார்த்துடணும்.. ஏற்கனவே அரவிந்த்சாமி வேற என் மேல கோபத்துல இருக்கார்.. அவரை கூல் பண்ணனும்” என கூறியுள்ளார்.