அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிக்கும் மாஃபியா படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார்.
இதில் இருவரும் பேசியுள்ள வசனம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. “ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா? நரியோட தந்திரமா?” என்பது தான் அந்த வசனம்.
குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி உள்ளது இந்த மாஃபியா திரைப்படம். இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.
டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருந்தார்.