விஷாலும் ஆர்யாவும் ஒருவரை ஒருவர் ‘அவன் இவன்’ என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு திக் பிரண்ட்ஸ் என்பது ஊரறிந்த விஷயம். சமீபத்தில்.. விஷால் தமன்னா நடிப்பில் வெளியான ‘கத்திச்சண்டை’ படத்தின் ப்ரமோஷனுக்காக விஷால் ரசிகர்களுடன் லைவ் செய்ய இருப்பதாக ஒரு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது..
அந்த போட்டோவில் விஷால் கையில் ஒரு பெட்டியை வைத்திருப்பது போன்று இருந்தது.. இந்த லைவில் முதல் ஆளாக உள்ளே நுழைந்த ஆர்யா, தனது பாணியில் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டார் அதாவது,
“விஷால் உங்க கைல இருக்க பெட்டில
1. புல்லட்ஸ் இருக்கா
2. பழைய 500/1000 இருக்கா
3. பழைய அண்டர்வேர் இருக்கா
என்று கேட்டார் ஆர்யா.
விஷால் மட்டும் லேசுப்பட்டவரா என்ன..? அதற்கு விஷாலும், “மச்சான்.. இதில் புல்லட் புரூப் அண்டர்வேருடன் பழைய நோட்டுகளும் இருக்கிறது” என கிண்டலும் புத்திசாலித்தனமுமாக பதில் அளித்தார்.