‘அழகு குட்டி செல்லம்’ பிரஸ்மீட்டில் பாடம் எடுத்த இயக்குனர்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நீயா நானா’ ஷோவின் இயக்குனர் ஆண்டனி தயாரித்துள்ள படம் தான் ‘அழகு குட்டி செல்லம்’.. இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் சார்லஸ்.. இவர் ஏற்கனவே ‘நஞ்சுபுரம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். தற்போது குட்டீஸ்களை வைத்து, புதுமையான முறையில் இந்தப்படத்தை இயக்கியுள்ளாராம்.

இந்தப்படத்திற்காக இன்று பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.. இந்த சந்திப்பின்போது கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு மேலாக படம் எடுத்தது பற்றி ஒரு பாடமே எடுத்து பத்திரிகையாளர்களை நெளிய வைத்துவிட்டார் சார்லஸ்.. ஆனால் ட்ரெய்லர், பாடல் காட்சிகளை பார்க்கும்போது படம் நெளிய வைக்காது என்றே தெரிகிறது.