‘பரதேசி’ படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் , இளையராஜா இசையமைப்பில், சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் சசிகுமார் நாதஸ்வர வித்வானாகவும், வரலட்சுமி கரகாட்டம் ஆடுபவராகவும் நடிக்கப் போகிறார்கள்.
இந்த படத்திற்காக இளையராஜா இசையமைப்பில் ஏற்கெனவே 12 பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன.
இளையராஜா இசையமைக்கும் 1000வது படமாக ‘தாரை தப்பட்டை’ அமையப் போகிறது.
‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் 1975ல் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா குறுகிய காலத்திலேயே ‘மூடுபனி’ படம் மூலம் 100வது படத்திற்கு இசையமைத்த பெருமையப் பெற்றார். அதற்கடுத்து பல இந்திய மொழிகளில் இசையமைத்து தற்போது யாருமே தொடாத ஒரு உயரத்தைத் தொட்டிருக்கிறார்.
இப்படத்திற்காக நாதஸ்வரக் கலைஞராக நடிப்பதற்கு சசிகுமாரும், கரகாட்டம் ஆடுபவராக நடிப்பதற்கு வரலட்சுமியும் தற்போது சிறப்புப் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
பல சிறப்புகள் வாய்ந்த ‘தாரை தப்பட்டை’ வெற்றிகரமாக முழங்கப் போது உறுதி…