ஜெய், அஞ்சலி நடிப்பில், வரும் டிச-29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் பலூன். சினிஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சினிஷ் இந்தப்படம் உருவாக்கம் குறித்த சில தகவல்களை நேர்மையாக பகிர்ந்துகொண்டார்.
“நான் வேறு ஒரு கதை தயார்செய்து வைத்திருந்த நிலையில், ஒருமுறை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை சந்தித்தபோது, ஹாரர் படத்திற்கு கதை ரெடி பண்ணுங்கள் என கூறினார். திடீரென எப்படி ஹாரர் கதை ரெடி பண்ணுவது என யோசித்தாலும் பல ஹாலிவுட் பட டிவிடிக்களை பார்த்து பார்த்து அலசி, அவற்றில் இருந்து புதிதாக ஒரு லைன் பிடித்து இந்தக்கதையை உருவாக்கினேன்..
இதை நானே பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன்.. ஒரு சிலரைப்போல் மௌன ராகம் படத்தை காப்பி அடித்து எடுத்துவிட்டு, நான் மௌன ராகம் படத்தை பார்க்கவேயில்லையே என்றெல்லாம் பொய்சொல்ல மாட்டேன்” என ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் இயக்குனர் சினிஷ்
இயக்குனர் அட்லி முதன்முதலாக இயக்கிய ‘ராஜாராணி’ படம் மௌனராகம் படத்தின் தழுவல் என்பதும், அதை அட்லி ஒப்புக்கொள்ளாமல் மறுத்ததும் நீண்ட நாட்கள் மீடியாக்களில் அடிபட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதனால் அவர் அட்லியைத்தான் சொல்கிறார் என்பது நன்றாகவே புரிகிறது. அதுசரி அட்லிக்கும் அவருக்கும் என்ன பிரச்சனையோ..?