பீப் சாங் ஜுரத்தை சிம்பு பற்றவைத்து போய்விட்டார்.. இங்கு சிலருக்கோ எதை கேட்டாலும் பீப் வார்த்தை போலவே தெரிய ஆரம்பித்துவிட்டது. அப்படித்தான் விஷாலின் ‘கதகளி’ படத்தின் ட்ரெய்லரில் நாயகி கேத்தரின் தெரசாவிடம் விஷால் காண்டம் இருக்கா என கேட்டதை ஏதோ தரக்குறைவான விஷயம் போல தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ராதிகா.
இதுபற்றி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது விஷாலிடம் கேட்டதற்கு, “இதை கேட்டா ரொம்ப காமெடியா இருக்குங்க.. ஏங்க சென்சார் பார்த்து அனுமதித்த ஒரு விஷயத்தை, அதுவும் செக்ஸ் கல்வி வேண்டும் என்று சொல்கிற இந்த நேரத்தில் விமர்சிப்பதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது” என பதில் அளித்தார்.