சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர்?


பேட்ட திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 168 வது படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்திற்கு தற்போது அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடைபெற்றது. அடுத்தக்கட்டமாக கொல்கத்தா செல்ல உள்ளனர். மார்ச் மாதம் கொல்கத்தா, புனேவில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காலா, பேட்ட, 2.0, தர்பார் ஆகிய படங்களில் நானா படேகர், நவாசுதீன் சித்திக், அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி ஆகியோர் வில்லன்களாக நடித்தது போல், அண்ணாத்த படத்திலும் பாலிவுட் நடிகர் ஒருவர் தான் வில்லனாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.