பாலிவுட்டில் சில துக்கடா நடிகர்கள் இருக்கிறார்கள்.. சினிமாவில் சில காட்சிகளில் தலைகாட்டியிருந்தாலும் ரசிகர்களால் பெரிதும் அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருந்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்ற பிரபலங்கள் பற்றி சர்ச்சையாக கருத்துக்களை கூறி தங்களுக்கு சீப் பப்ளிசிட்டி தேடிக்கொள்வது வழக்கம் தான்.
அப்படி ஒரு ஆள் தான் பாலிவுட் நடிகரான கமால் ரஷீத் கான்.. இவர் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் நடிகர் அல்ல.. சின்னத்திரை மற்றும் யூடியூப் விமர்சனங்கள் மூலமாக பிரபலமான இவர் இந்திப்படங்களில் துண்டு, துக்கடா வேடங்களில் தலைகாட்டி வருபவர்.. ஒவ்வொரு மொழியிலும் உள்ள பிரபலங்கள் குறித்தும் கிண்டலான வார்த்தைகளை கூறி அதன்மூலம் மலிவான விளம்பரம் தேடிக்கொள்வதுதான் இந்த கமால் ரஷீத் கானின் நோக்கம்..
அதன்படி ‘புலி முருகன்’ வெளியான சமயத்தில் மோகன்லாலை ஜோக்கர், சோட்டா பீம் என கிண்டலடித்தார். மம்முட்டியை ‘சி’ கிளாஸ் நடிகர் என்றார்.. உலகமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்திய ‘பாகுபலி-2’வை கார்ட்டூன் படம் என்றார்.
இதற்காக சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக்கட்டியும் கொண்டவர்.. ஆனாலும் திருந்திய பாட்டை காணோம்.. இப்போது இவரது டார்கெட்டுக்கு ஆளாகி இருக்கிறார் அஜித்.. ஆம், சமீபத்தில் வெளியாகியுள்ள அஜித்தின் விவேகத்தை பார்த்த இந்த கமால் ரஷீத் கான், அஜித்தின் தோற்றம் குறித்து கிண்டலடித்துள்ளார்..
“அஜித்ஜி.. குறிப்பாக உங்களைப்போன்ற வயதான நடிகர்கள் எங்களது பாலிவுட்டில் அப்பா வேடத்தில் தான் நடிப்பார்கள்.. ஆனால் தமிழ் ரசிகர்கள் எப்படி உங்களை ஹீரோவாக ஏற்றுக்கொள்கிறார்களோ தெரியவில்லை.. விவேகம் படத்திற்கு வாழ்த்துக்கள்” என அஜித்தை பற்றி கிண்டலடித்துள்ளார்.. இதைக்காண்டு அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் ரசிகர்களும் சேர்த்து சோஷியல் மீடியாவில் இந்த கான் நடிகரை தொடர்ந்து செந்தமிழ் மொழியில் அர்ச்சனை செய்து வருகின்றனர்.