ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடிக்க பல நடிகர்கள் துடித்துக்கொண்டிருக்க, அப்படி வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் பாலிவுட்டின் இளம் நடிகர் அக்சய் ஓபராய்.. பெயரை பார்த்ததுமே ஓரளவுக்கு காரணத்தை உங்களால் கிரகிக்க முடிகிறதா..? ஆம். பிரபல நடிகர் விவேக் ஓபராயின் ஒன்றுவிட்ட சகோதரர் தான். சரி வாய்ப்பை ஏன் மறுத்துவிட்டாராம்..?
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொள்வதற்கு முன், ஐஸ்வர்யா ராயும் விவேக் ஓபராயும் காதலித்து வந்தது ரொம்பவே பிரபலம். ஆனால் அதன்பின் விவேக் ஓபராயை கழட்டிவிட்டு அபிஷேக்கை திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அந்த கோபம் காரணமாகத்தான் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடிக்க அக்சய் மறுத்துவிட்டாராம்.