அமலாபாலின் முன்னாள் கணவருக்காக மேடையில் கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை

மறைந்த தமிழக முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற படம் தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மணிகர்ணிகா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது, இன்றைய தினம் அவரது பிறந்தநாள், அந்த பிறந்தநாளில் அவர் நடித்துள்ள தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியாவது என கங்கனா ஒன்றுக்கு மூன்று சந்தோஷ நிகழ்வுகளால் ரொம்பவே உற்சாகமாக காணப்பட்டார்.

இவ்விழாவில் கங்கனா, அரவிந்த்சாமி, சமுத்திரகனி, தம்பி ராமையா, ஜி.வி.பிரகாஷ், மதன் கார்க்கி, பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதர மகனாகிய தீபக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் இறுதியில் முத்தாய்ப்பாக நடிகை கங்கனா ரனாவத் பேசும்போது, குறிப்பாக இயக்குனர் விஜய் குறித்து பேசும்போது, சற்றே உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்,

“தலைவி” திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியனேன். பிறகு இயக்குனர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது.

பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை தலைவி படத்தில் இயக்குனர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். என் திறமைக்கு மதிப்பளித்தார். {அவர் இதனை கூறியபோது கண்கலங்கினார்} என்னை முழுதாக இப்படத்திற்காக மாற்றினார்.. இப்படம் மொத்த இந்தியாவிற்கானது. அனைவருக்கும் பிடிக்கும். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்” என்றார்.

இந்த படத்தினை Zee Studios நிறுவனம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.