சிம்பு படமும் பிப்ரவரி-29ஆம் தேதியும் ஒண்ணு என்று சொல்லும் அளவுக்கு அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் குறைந்தபட்சம் நான்காண்டுகளாவது தயாரிப்பில் இருந்து சிக்கி சின்னாபின்னப்பட்டு, விட்டால் போதுமென ரிலீஸாவது ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது. இதில் இவரை வைத்து இயக்குவது இயக்குனர் பாண்டிராஜ் ஆகட்டும், கௌதம் மேனன் ஆகட்டும் எல்லோருக்கும் ஒரே வித அனுபவம் தான்.
இப்போது இந்த சிம்பு சங்கிலியில் தன்னை சிக்கவைத்துக்கொண்டு தவிப்பவர் இயக்குனர் கௌதம் மேனன். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை கடந்த நான்கு வருடங்களாக எடுக்கிறார்..எடுக்கிறார். இன்னும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.. ஒருவழியாக கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் நெருக்கி முடிக்கும் அளவுக்கும் வந்துவிட்டாராம்.
நவ-11ஆம் தேதி படத்தை உறுதியாக ரிலீஸ் பண்ணி விடுவோம் என்றும் ஒரு டிவி ஷோ ஒன்றிலேயே வாக்களித்தும் விட்டாராம். சிம்பு படத்திற்கு பிரச்சனைகள் எல்லாம் ரிலீஸ் தேதி அறிவித்த பின்னாடி தானே ஒவ்வொன்றாக அணிவகுக்கும்.. சொன்னபடி நடத்தி காட்டுவாரா கௌதம் மேனன்.?