கடந்த சில மாதங்களாக நடிகைகள் பந்தா பண்ணுகிற மாதிரி எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் இருந்தது.. அப்படி இருந்தால் நல்லா இருக்காது என நினைத்தாரோ என்னவோ மெட்றாஸ் படத்தில் நாயகியாக நடித்த கேத்தரின் தெரசா பைவ்ஸ்டார் ஹோட்டல் ஒன்றி பணிய அடாவடிதான் இப்போது ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது இவர் நடித்துவரும் படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளாராம். இவர் தங்கியிருந்த அறையில் பாத்ரூமில் நீர் சுத்தமில்லாமல் வருவதாக கூறி, தனக்கு தினமும் மினரல் வாட்டர் தான் வேண்டுமென கூறி அடம்பிடித்தாராம். அதன்பின் கேன் கேனாக கொண்டுவந்து பாத் டப்பில் நிரப்பிய பின்னரே அம்மணி கோபம் தணிந்தாராம்.