சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் டார்ச்சர்களை ‘மீ டூ’ என்கிற பிரச்சாரம் மூலமாக சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் குறிப்பாக தமிழ் சினிமாவில் மீ டூவை பயன்படுத்தி முதன்முதலாக கவிஞர் வைரமுத்து மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை வைத்தார் பின்னணி பாடகி சின்மயி.
இந்த விஷயத்தில் சின்மயிக்கு ஆதரவாக எழுந்த கருத்துக்களை விட, அவருக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்கள் தான் அதிகம். காரணம் 2004ல் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறியிருந்த சின்மயி, பத்து வருடம் கழித்து 2014ல் தன்னுடைய திருமணத்திற்கு அதே வைரமுத்துவை அழைத்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார்.
அது கூட நிர்ப்பந்தம் காரணமாக என்றாலும், அந்த சமயத்தில் வைரமுத்துவிடம் அவர் சிரித்து சிரித்து பேசிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நபரிடம் சின்மயியால் எப்படி சிரித்து பேச முடிந்தது என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது.
இந்தநிலையில் இன்று தந்தி தொலைக்காட்சியில் கேள்விக்கு என்ன பதில் என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்மயி நெறியாளர் பாண்டேவின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறினார். பாண்டே கேட்ட கேள்விகள் அனைத்தும் நடுநிலையாகவும் அதேசமயம் ஆணின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து வைப்பதாகவும் இருந்தது.
ஆனால் சின்மயிக்கோ, தான் குற்றச்சாட்டை கூறிவிட்டோம் என்கிற ஒரே காரணத்துக்காக ஏதேதோ சொல்லி மழுப்பியதை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
அதிலும் வைரமுத்து மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என கேட்டதற்கு கோர்ட் லீவு என சொன்னாரே பார்க்கலாம்… அதை நினைத்தால் இபோதும் சிரிப்பு வருகிறது.