100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் மரணமடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்புக்கு சென்று வீடு திரும்பிய ஜெயச்சந்திரன், மறுநாள் காலை குளியலறைக்கு சென்றபோது எதிர்பாராத வகையில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெயச்சந்திரன் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
அவருடைய மனைவியின் பெயர் ஜெயலட்சுமி. அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்
நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
காமெடி நடிகர் ஜெயச்சந்திரனின் மரணம் திரைப்படத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.