சுவரேறி குதித்து தப்பிக்க முயன்ற நடிகர்..!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறதோ, அதே அளவிற்கு விமர்சனமும் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன. அதேசமயம் அதில் பங்கு பெற்றவர்களுக்கு நல்ல விளம்பரமும் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நாடோடிகள் படத்தில் நடித்த பரணியை எல்லோரும் மறந்திருந்த நேரத்தில் அவர்மீது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகர் பரணியை அங்குள்ளவர்கள் அனைவரும் டார்கெட் செய்கிறார்கள் என்பதால் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பரணி வீட்டின் சுவர் ஏறிக்குதிக்க முயற்சி செய்தார். அனால் அது தோல்வியில் முடிந்தது.

தான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக கூறிய பரணி, உடனே தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றும் படி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டின் விதியை மீறியதாக பரணி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த சர்ச்சை நிகழ்வுகளே இன்னும் கொஞ்ச நாளைக்கு பரணியை பற்றி பேசவைக்கும்.. அவருக்கு புதிய பட வாய்ப்புகளை கூட வாங்கித்தரும் என்பதும் உண்மை.