வழக்கின் ஆதாரத்தை திலீப்பிடம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..!


நடிகை வழக்கில் சிறைசென்று ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகர் திலீப், இந்த வழக்கில், தான் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறிவருவதுடன், வழக்கை உடைக்கும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் நடிகை கடத்தப்பட்ட சமயத்தில் காருக்குள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகளை போலீசார் அனுமதியுடன் பார்த்த திலீப் அதில் சில சந்தேகங்களை எழுப்பினார்.

இதனால் அந்த வீடியோவை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய தனக்கு ஒரு வீடியோ பிரதி தருமாறு கேட்க, விசாரணை குழுவினரோ அதை தர மறுத்துவிட்டனர்.

இதை தொடர்ந்து திலீப் அங்கமாலி நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிட, தற்போது அந்த வீடியோ மற்றும் உள்ள ஆதாரங்களின் பிரதியை திலீப் வசம் ஒப்படைக்க விசாரணை குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.