இடைவெளி விடாமல் ஹீரோக்களை நையாண்டி செய்யும் இயக்குனர்


சின்ன படங்களை கவனத்துக்கு வேண்டுமென்றால் ஒன்று இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட அடல்ட் காமெடி படம் எடுக்கலாம்.. இல்லையென்றால்,முன்னணி ஹீரோக்களையோ அல்லது அரசியல்வாதிகளையோ கலாய்த்து படம் எடுக்கலாம். இயக்குனர் சி.எஸ்.அமுதன் இரண்டாவது வேலையைத்தான் செய்து வருகிறார்.

தமிழ்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தமிழ்படம் 2 என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சிவா – அமுதன் கூட்டணியே இணைந்துள்ளனர். சிவா உடன் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார்.முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் தமிழ் சினிமாவின் தற்போதைய டிரண்ட் மற்றும் தற்போதைய அரசியல் சூழலை கலாயத்து படமாக்கி உள்ளனர்.

முன்னணி நடிகர்களின் படங்களை, காட்ச்சிகளை கலாய்த்து உருவாக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து ‘நான் யாருமில்ல’ என்ற சிங்கிள் வீடியோ பாடல் நேற்று வெளியானது. ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன் என ஒருவரை கூட விட்டு வைக்காமல் இந்தப்பாடல் கலாய்க்கப்பட்டுள்ளது.

“சுனாமியின் பினாமியே…, பருப்புடா…, பீட்டா வந்தா எனக்கென்னா, மீத்தேன் வந்தா எனக்கென்னா…, வரலாம் வரலாம் வா…., இது தானா சேர்ந்த கூட்டமில்ல… ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்…, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது… என் உயிர் மூச்சு சங்கம்டா மண்டபம் கட்டிட்டு தான் கல்யாணம் டா…. இதுபோன்ற பல கலாய்ப்பு வார்த்தைகள் இந்தப்பாடலில் இடம் பெற்றுள்ளன.