ஒரு பக்கம் நடித்த படங்கள் வரிசையாக பிளாப் ஆக, இன்னொரு பக்கம் தயாரிப்பாளராக விஜய் சேதுபதி தயாரித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படமும் அவரது கையை சுட்டுவிட்டது. இந்த நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை என்கிற படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து வருகிறார் விஜய் சேதுபதி.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் மக்கள் எப்படி கேரள மக்களிடம் தனகளது நிலங்களையும் எஸ்டேட்டுகளையும் இழந்தார்கள் என்பதை மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளாராம் இயக்குனர் லெனின் பாரதி. இவர் விஜய்சேதுபதியின் நீண்டநாள் நண்பர். படம் நன்றாக வந்திருப்பதாக கேள்வி.
‘காக்கா முட்டை ரிலீஸுக்கு முன்னரே எனக்கு போட்ட காசை எடுத்து தந்துவிட்டது. இனி வரும் ஒவ்வொரு ரூபாயும் லாபம் தான்” என தனுஷ் சொன்னார் அல்லவா..? அதனால் அவசரப்பட்டு படத்தை ரிலீஸ் பண்ணாமல் தனுஷின் பாணியைத்தான் இப்போது விஜய்சேதுபதி பின்பற்ற முடிவு செய்துள்ளாராம்.
‘காக்கா முட்டை’ பாணியில் சர்வதேச பட விழாக்களுக்கு இந்தப்படத்தை அனுப்பி வைத்து அதற்கான மார்க்கெட் வேல்யூவை ஏற்றி, படத்தை ரிலீஸுக்கு முன்பே பிரபலமாக்கிவிட்டு அதன்பின் வெளியிடலாம் என்கிற ஐடியாவில் விருதுக்கு அனுப்பும் வழிமுறை தெரிந்த ஆட்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறாராம் விஜய்சேதுபதி..