உஷாராக ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்த தர்பார்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு தர்பார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே, இந்த படம் 2020-ல் பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் இந்த வருடம் விஸ்வாசம் படத்துடன் பேட்ட படமும் மோதியது விஸ்வாசம் படம் முதலில் ஆரம்பிக்கப்பட்டபோதே அது பொங்கலுக்குத்தான் வெளியாகும் என உறுதியாக முன்கூட்டியே சொல்லி விட்டார்கள். ஆனால் அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா, 2.O ஆகிய படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகின. இந்த கேப்பில் பேட்ட படத்தையும் வெளியிட்டு விட வேண்டும் என முடிவு செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் திடீரென்றுதான் அந்த படத்தை பொங்கல் ரிலீசாக அறிவித்தது.

இது அந்த சமயத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது எதிர்பார்த்தது.. அதுபோலவே பொங்கல் சமயத்தில் இரண்டு படங்கள் குறித்தும் இரு தரப்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கருத்து மோதல்கள் எழுந்து சோசியல் மீடியாவை அதிர வைத்தன.

அதனால் இந்த முறை அது போன்ற மோதல்கள் இருக்கக்கூடாது என நினைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் லைக்கா நிறுவனம் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஆலோசனையின்படி தர்பார் படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து விட்டனர் என்கிறார்கள்.