தான் நடித்த முதல் படத்தில் அதிரடியாக கெட்டப்பையும் நடிப்பையும் மாற்றி ஆச்சர்யப்பட வைத்தவர் ‘திலகர்’ படத்தில் நடித்த நடிகர் துருவா. தற்போது அவர் நடித்துவரும் படம் தான் ‘தேவதாஸ் பிரதர்ஸ்’. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஜானகிராமன் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் சென்னையில் உள்ள யானைக்கவுனியில் நடந்தபோது, அந்தப்பகுதியின் ஆயிரக்கணக்கான மக்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால் அப்போது அந்த ஏரியாவில் மாமூல் வாங்கும் ரவுடிகள் சிலர் அங்கே வந்து பிரச்சனை பண்ணியுள்ளனர்.. இதனால் அதிர்ச்சியான இயக்குனர் எப்படியோ அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து சரிக்கட்டி படப்பிடிப்பை நடத்தினாராம்.