கவுண்டமணி வெற்றிகரமாக ரீ என்ட்ரியாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.. ‘49-ஓ’ படத்தை தொடர்ந்து ‘வாய்மை’ படமும் ரிலீஸாக தயாராக இருக்கிறது.. இதைத்தொடர்ந்து தற்போது ‘எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. இதில் கதாநாயகி தவிர்த்த கவுண்டமணியின் போர்ஷன்கள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.
கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை இன்னும் முடிவாகவில்லையாம். அவருக்கு ஜோடியாக நடிக்க தேவயானியை கேட்டார்களாம். ஆனால் அவரோ நடிக்க மறுத்ததோடு, கவுண்டரை பற்றி தேவையில்லாமல் ஏதோ வார்த்தையை விட்டுவிட்டாராம்.
இந்த தகவலை மறைக்க நினைத்தாலும் கூட கவுண்டரின் காதுக்கு எப்படியோ விஷயம் போய்விட்டது.. உடனே அவர் கூலாக அவர் ஸ்டைலில், “அட விடுங்கப்பா.. இந்த நேபாள நடிகை எல்லாம் எனக்கு ஜோடியா வேணாம்ப்பா.. இங்க உள்ளூர்லேயே ஏதாவது ஒருத்தர பாருங்கப்பா” என தேவயானிக்கு சரியான நோஸ்கட் கொடுத்தாராம்.. யூனிட்டார் அப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.