தனுஷின் ‘வி.ஐ.பி-2’ படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்திருப்பதால் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மும்பையில் வைத்து நடத்திவிட்டார்கள். இவ்விழாவில் தனுஷின் பேச்சுக்காகப் பலரும் காத்திருந்தார்கள். அவரும் உற்சாகமான மனநிலையில் தான் இருந்தார். ஆனால், ஒரு பத்திரிகையாளர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வியெழுப்பியதால், தனுஷின் நல்ல மூட் அவுட்டானது.
அந்த பத்திரிகையாளருக்கு கோபத்தை வெளிக்காட்டாமல் பதிலளித்த தனுஷ், “அழைப்பிதழிலேயே அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தும் கேட்டிருக்கிறீர்கள். ரஜினி சார் அரசியலில் வருவது குறித்து எனக்கொரு கருத்து இருக்கும். உங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும். என் கருத்தை என்னோடு வைத்திருக்க விருப்பப்படுகிறேன் என்று அந்தக் கேள்விக்குப் பதில் கூறினார்.