குக்கூ என்ற அற்புதமான படைப்பை கொடுத்த இயக்குநர் ராஜு முருகனின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் குரங்காட்டி என்ற புத்தகத்தின் கதையை தழுவி இந்த படத்தின் கதை இருப்பதாகவும் பல தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இதற்கு இயக்குநர் ராஜு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை நான் இன்னும் முழுவதுமாக முடிக்கவில்லை, கதை, திரைக்கதை தயாரானதும் அந்த படத்தில் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது, ஆனால் இன்னும் அந்த நடிகர் யார் என்று முடிவு செய்யவில்லை. அதற்குள் என்னுடைய படத்தில் தனுஷ் நடிப்பதாகவும் படத்தின் கதை திருவுடையன் எழுதிய குரங்காட்டி நூலை தழுவியதாகவும் தவறாக செய்திகள் பரவிவிட்டன என்று ராஜு முருகன் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது தனுஷ் பாலிவுட்டிலும் ஒரு செல்ல குழந்தையாகிவிட்டதால் அங்கேயும் படங்கள் நடிக்க வேண்டும் இங்கேயும் நடிக்க வேண்டியிருப்பதால் கண்டிப்பாக ராஜு முருகன் படத்தில் அவர் இருக்க வாய்ப்பில்லை, அமிதாப்புடன் ஒரு இந்தி படம், தமிழில் கே.வி.ஆனந்தின் அனேகன், வெற்றிமாறனின் சூதாட்டி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்…