‘பீட்டா’விடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கினாரா தமிழச்சி த்ரிஷா..?


ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கோபம் த்ரிஷா மீது திரும்பியதால், கடந்த ஒரு வாரமாகவே த்ரிஷா மீதான கருத்து தாக்குதல் விடாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.. சில தினங்களுக்கு முன் அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து துரத்தி அடித்தார்கள் சிவகங்கை பகுதி கிராமத்து மக்கள்.. விடாமல் தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்தில் சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்தார்கள் இன்னும் பலர்..

ஆனால் த்ரிஷாவோ இப்படி செய்வதுதான் தமிழர் பண்பாடா, நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்.. ஆனால் அவருக்கு இத்தனை எதிர்ப்புகள் கிளம்பியதே, ஜல்லிக்கட்டை தடைசெய்யக்கோரி நீதிமன்றத்தில் தடைவாங்கிய பீட்டா அமைப்பில் அவர் இன்னும் உறுப்பினராக நீடிப்பதால் தான்.

த்ரிஷா பிராணிகள் மீது கருணை காட்டிவிட்டு போகட்டும்.. அதை எதற்கு ‘பீட்டா’வில் சேர்ந்துதான் காட்டுவேன் என அடம்பிடிக்கவேண்டும்.. தமிழர்களின் தன்மானத்தோடு விளையாடும் பீட்டாவில் இருந்து த்ரிஷா விலகினால் அவருக்கு என்ன நட்டம் வந்துவிடப்போகிறது..? தமிழர்களை விட ‘பீட்டா’ அவருக்கு அப்படி என்ன முக்கியமாக போய்விட்டது..?

அல்லது பீட்டாவில் இருந்து கோடிக்கணக்கான பணம் த்ரிஷாவுக்கு கைமாறியுள்ளதா என சமூக வலைதளங்களில் பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.. அதுபற்றிய ஒரு உறுதியான முடிவை அவர் ஆணித்தரமாக அறிவிக்காதவரை த்ரிஷாவுக்கும் இடைஞ்சல் தான்.. அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள், தயாரிப்பளர்களுக்கும் இடைஞ்சல் தான்..

வீண் பிடிவாதத்தையும் வறட்டு கௌரவத்தையும் தூக்கிப்போட்டு விட்டு த்ரிஷா இறங்கி வருவது தான் அவரை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் என திரையுலகத்தை சேர்ந்த பலரும் பேசிக்கொள்கிறார்கள்.