குடியும் குடி சார்ந்த நட்பும் தான் இயக்குனர் ராஜேஷின் பிரதான கதைக்களம்.. அதில் வழக்கம் போல காதலியுடன் மோதல், நண்பனுடன் ஊடல், ஐட்டம் பாட்டுக்கு ஆடல் என ரெடிமேட் ஐட்டங்களை புகுத்தி, புது பாட்டிலில் அடைத்து, புது சரக்கு போல நமக்கு கொடுப்பார். அதற்கேற்றபடி டைட்டில் கூட இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் ஆரம்பித்துள்ளார்.
முந்தைய படத்துக்கு பெயரளவுக்கு ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என டைட்டிலை வைத்துவிட்டு, படத்தை பற்றி குறிப்ப்பிடும்போதேல்லாம் ‘வி.எஸ்.ஓ.பி’ என்றுதான் குறிப்பிட்டார். ஆனால் இந்தமுறை அவரது சரக்கு கதையையும் நண்பனின் புலம்பலையும் கேட்க ரசிகர்கள் தயாராக இல்லாததால், ‘வி.எஸ்.ஓ.பி’க்கு மவுசு இல்லாமல் போய்விட்டது.
இப்போது அடுத்த படத்தை ஆரம்பிக்க இருக்கும் ராஜேஷ், தனது புதிய படத்துக்கு ‘குடியும் குடித்தனமும்’ என டைட்டில் வைக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.. சுத்த தமிழிலும் பெயர் வைத்த மாதிரி ஆயிற்று.. அவரது வழக்கமான சரக்கு சம்பந்தமான பெயராகவும் ஆயிற்று.. எப்படி.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிறார் பார்த்தீங்களா..?