ஏலக்காய் பறிக்கும் வேலைக்கு மாத சம்பளத்திற்கு நடிகையை அனுப்பிய இயக்குனர்..!


விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘மேற்கு தொடர்ச்சி மலை’.. இந்தப்படத்தை விஜய்சேதுபதியின் நண்பரான லெனின் பாரதி என்பவர் இயக்கியுள்ளார். புதுமுகம் ஆண்டனி ஹீரோவாகவும், ஜோக்கர் படத்தில் இசை என்கிற வேடத்தில் நடித்த் காயத்ரி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் தென்மாவட்ட மலைப்பகுதி கிராமங்களில் நடைபெற்றுள்ளது.. இது அந்த மலைப்பகுதி மக்களின் வாழ்க்கை என்பதால் படப்பிடிப்பு துவங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே அந்த மலைப்பகுதியில் வீடு எடுத்து தங்கினார்களாம்.

கதாநாயகனாக நடிக்கும் ஆண்டனி அந்த மக்களின் இயல்பு வாழ்க்கையுடன் ஒன்றாக கலக்கவேண்டும் என்பதற்காக அவரை மூட்டை தூக்கும்ம் வேலைக்கும் தொட்ட வேலைக்கும் அனுப்பி வைத்தாராம் இயக்குனர் லெனின் பாரதி. அதுமட்டுமா..? படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம் முன்னதாக கதாநாயகியையும் அங்கே வரவழைத்து அவரை ஏலக்காய் பறிக்கும் தோட்டவேலைக்கு சேர்த்துவிட்டாராம்.

அவர் கதாநாயகி என்பதை யாரிடமும் சொல்லாமல், சொந்தக்காரப்பொண்ணு என்பதாக கூறி வேலைக்கு சேர்த்துவிட, நாயகி காயத்ரியும் தினமும் வேலைக்கு சென்று சம்பளமும் வாங்கினாராம். ஆனால் அந்த சமயத்தில் ஜோக்கர் படம் ரிலீஸாகாததால் காயத்ரியை யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லையாம்.