“அஜித் பணம் கொடுத்தார்னு உனக்கு தெரியுமா..?” ; சீனியர் நடிகர் காட்டம்..!


நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறார்கள். இந்தப்போட்டி ஒளிபரப்பும் உரிமையை சேனல் ஒன்றுக்கு 9 கோடிக்கு விற்றுள்ளர்கள். இதுபோக நட்சத்திர கிரிக்கெட்டை பார்க்க வரும் பார்வையாளர்கள் கட்டணமே குறைந்த பட்சம் 1000 ரூபாய் இருக்குமென்று சொல்கிறார்கள்.

இது சம்பந்தமான கூட்டம் சமீபத்தில் நடைபெற்றபோது இளம் நடிகர் ஒருவர், ஆர்வக்கோளாறில் நாமே ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டால் பெரிய தொகை சேர்ந்துவிடுமே, எதற்கு மற்றவர்களிடம் கையேந்தவேண்டும் என கேட்டாராம்.. அதற்கு அருகில் இருந்த சீனியர் அதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா என்றாராம்..

இளம் நடிகரும் விடாமல், ஏன் சரிப்பட்டு வராது.. இப்படித்தான் முன்பு நடசத்திர கலைவிழா எல்லாம் நடத்தவேண்டாம் என்றும் நாமே சேர்ந்து கட்டடம் கட்டலாம் என்றும் அஜித் 10 லட்ச ரூபாயை தன் பங்காக கொடுத்தாரே.. அதைக்கூட வாங்கவில்லையாமே என்று கேட்டுள்ளார்.. தற்கு டென்ஷனான சீனியர் நடிகர் அந்த ஆளு பத்து லட்சம் கொடுத்தாதா நீ பார்த்தியா..? இல்ல உன்கிட்ட சொன்னாரா..? எவனோ வேலையில்லாம சும்மா டுபாகூர் செய்தியை அள்ளிவிட்டான்னா அப்டியே நம்பிடுவீங்களா.. ஒழுக்கமா போட்டிய நடத்துற வழிய பாருங்க” என சீற கப்சிப் ஆனாராம் இளம் நடிகர்.

ஒருவேளை அஜித் கொடுத்திருப்பாரோ.? அதனால் தான் இவ்வவளவு காட்டமோ..?