டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டண கொள்ளைக்கு எதிராக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கத்தினர் படங்களை ரிலீஸ் செய்வதை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனையில் இவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்கவேண்டிய தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல பழைய படங்களையும் மற்ற மொழி படங்களையும் திரையிட்டு கல்லா கட்ட முயற்சித்தனர்.
ஆனால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராமல் காற்று வாங்கவே, வேறு சில கோரிக்கைகளை ஒப்புக்கு சப்பாக சொல்லி, தாங்களும் மார்ச்-16 முதல் படங்களை திரையிடாமல் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் தியேட்டர்கள் உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், மார்ச்-16ல் தியேட்டர்கள் மூடப்படாது என கூறினார்.
ஆனால் இன்னொரு தரப்போ தியேட்ட்ர்கள் செய்லபடாது என அறிவித்தன. அந்தவகையில் சென்னையில் உள்ள மலிடி பிளக்ஸ் தியேட்டர்கள் தவிர தமிழகமெங்கும் இன்று தியேட்டர்கள் இயங்கவில்லை என்பதே உண்மை..
அபிராமி ராமநாதன் போன்ற சில ஈகோ பிடித்த, பணத்தாசை பிடித்த நபர்கள் இருப்பதால் தான், க்யூப் போன்ற டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கித்தாப்பு காட்டி வருகின்றன என இன்டஸ்ட்ரியில் பலர் நம் காதுபடவே பேசியதை கேட்க முடிந்தது.
அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இந்த பிரச்சனையில் ஈகோ பார்க்காமல் இணைந்து கைகொடுத்தால் தான் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாலை சுருட்டிக்கொண்டு திரையுலக கட்டுப்பாடுகளை மதிக்கும்.. அப்படி இல்லையேல் அவர்கள் கொட்டத்தை அடக்குவது கஷ்டம் தான் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.