சசிகுமாரை டீலில் விட்டாரா பாலா..?


பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லைதான். சசிக்குமாருக்கு ஒரு நடிகராக இதில் பெரிய ஸ்கோர் கிடைக்கவில்லைதான்.. இத்தனைக்கும் பாலா, சசிகுமார் இருவரும் இணைந்துதான் இந்தப்படத்தை தயாரித்திருந்தார்கள்..பாலா செய்த புத்திசாலித்தனமான விஷயம் படத்தை ஐங்கரன் நிறுவனத்துக்கு கைமாற்றி விட்டதுதான்.

படம் சரியாக போகவில்லை என்றாலும் போட்ட காசுக்கு பஞ்சம் இல்லாமல் கொஞ்சம் கூடுதலாகவே பாலாவுக்கு வந்துவிட்டதாம். அனால் சகம் என்னவென்றால் படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான சசிகுமாருக்கு இதில் ஏதும் பங்கு தந்து நட்டத்தை சரிக்கட்டாமல் டீலில் விட்டுவிட்டாராம் பாலா.. இந்த விஷயத்தை தனது குரு அமீரிடம் கொண்டுசென்று புலம்பினாராம் சசிகுமார்..