விஜய்யை அரசியல் வாரிசாக கைகட்டுகிறாரா ட்ராபிக் ராமசாமி..!

 

85 வயதான ட்ராபிக் ராமசாமியின் போராட்டங்கள் நாடறிந்த ஒன்று.. அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளின் மோசமான செயல்பாடுகளை எதிர்த்து தனி ஆளாக போராடி தவறு செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்.. அதுமட்டுமல்ல தனி மனிதராக ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கலங்கடித்தவர் டிராபிக் ராமசாமி. தற்போது அவரின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இதில் டிராபிக் ராமசாமியாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திர சேகர் நடித்து வருகின்றார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரோஹினி, சீமான், பிரகாஷ் ராஜ், குஷ்பு, விஜய் ஆண்டனி, எஸ்.வி சேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படம் குறித்து டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த படத்தின் கடைசியில் டிராபிக் ராமசாமி தன் அரசியல் வாரிசாக விஜய்யை கை காட்டுகிறார் என்றும், விஜய்யின் அரசியல் விளம்பரத்திற்காக டிராபிக் ராமசாமியின் புகழை பயன்படுத்திக்கொள்வதாக குற்றம்சாட்டினார்.

இதை கேட்ட டிராபிக் ராமசாமி, பாத்திமாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசினார். தவறான தகவல் தந்த பாத்திமாவின் முதுகில் மெதுவாக அடித்தார். இதையடுத்து பாத்திமாவின் கருத்துக்கு படக்குழுவினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ரஜினி, கமல் இருவரும் தீவிர அரசியலில் இறங்கியதால், தனக்கு இருந்த அரசியல் ஆசையை ஓரங்கட்டி வைத்துவிட்டு, சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் விஜய்.