ரூட்டை மாற்றுகிறாரா வரலட்சுமி..!


சினிமா நட்சத்திரங்களின் காதல் இருக்கிறதே, எப்போது என்ன ட்விஸ்ட் வரும் என்றே சொல்ல முடியாது.. சிலபேர் வேண்டும் என்றே யூகங்களுக்கு இடம் கொடுக்கும் விதமாக நடந்துகொள்வார்கள்… சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் கூட அந்த ரகம் தான்..

அவரும் விஷாலும் நெருங்கிப்பழகி ஊடகங்களின் பூடகன்களுக்கு தீனி போட்டாலும், இருவரும் தங்களை காதலர்களாக காட்டிக்கொண்டது இல்லை.. திஈரென சில நாட்களுக்கு முன்பு.. “காதல் முறிந்தது. மேனேஜர் மூலமாக காதல் முறிவை அனுப்பும் ஆளை பார்த்திருக்கிறீர்களா” என ட்வீட் போட, ஆளாளுக்கு அது விஷால் தான் என முடிவுகட்டி கதை எழ்தினர்கள்..

ஆனால் அதுபற்றி இருவருமே வாய் திறக்கவில்லை.. இப்போது சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட வரலட்சுமி சிம்புவிடம் நன்றாகவே நெருக்கம் காட்டியதோடு, அதை செல்பி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது யாருக்கோ சூசகமாக அவர் பதில் சொல்வதுபோலத்தான் இருந்தது.

விசாலுக்கு சிம்புவும் நடிகர் சங்க தேர்தலில் இருந்தே ஆகாது.. சிம்பு சரத்குமாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்… வரலட்சுமி விஷால் பக்கம் சுற்றினார். ஆனால் சினிமாவை பொறுத்தவரை வரலட்சுமியின் முதல் பட ஹீரோ சிம்புதான். அந்த நட்பும் இருக்கும் இல்லையா..? அனால் தற்போது விஷாலிடம் இருந்து விலகி நிற்பதாக தகவல்.. எல்லாத்தையும் கூட்டி கழித்து பார்த்தால் குழம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.