விஜய்யின் 63 வது படமாக உருவாவதால் ‘தளபதி 63′ ஹாஷ் டாக் ஏற்கனவே வைராலாகி இருக்கிறது. இந்த படத்தின் பூஜை வரும் 20 தொடங்கி 21ல் இருந்து படபிடிப்பு தொடங்குகிறது. தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மய்யப்படுத்திய கதை என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக தீவிர பயிற்சியில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க பெண்கள் கால்பந்து போட்டியும் அதன் பின்னால் இருக்கும் அரசியலையும் அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் புகார் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அந்த உதவு இயக்குநர் கூறியிருக்கிறார். சட்ட ரீதியாக இந்த பிரச்னையை அனுக போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, கத்தி, சர்கார் திரைப்படம் பெரும் எதிர்ப்புகளக்கு மத்தியில் திரையிடப்பட்டது. அப்போதாவது படம் ரிலீஸாகும் நேரத்தில் தான் இதுபோன்ற பிரச்சனைகள் தலைதூக்கின. ஆனால் தற்போது இன்னும் படம் தொடங்கவே இல்லை அதற்குள் எண்டு கார்டு போட முயற்சி நடப்பதாக விஜய் ரசிகர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.
ஏற்கனவே தெறி, மெர்சல் என இரண்டு படங்களிலும் கதை சர்ச்சையில் தேவையிலாமல் விஜய்யை சிக்கவைத்த அட்லீ இந்தமுறையாவது அவருக்கு அப்படி ஒரு அவப்பெயர் தாராமல் ஆரம்பத்திலேயே பிரச்சனைகளை களைய முற்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.