சிம்புவை வைத்து யார் படம் இயக்கினாலும் அது வயசுப்பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு எந்நேரமும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கும் தாயைபோலத்தான் அந்த தயாரிப்பளாரின் நிலையம்.. எப்போது என்ன ஆகுமோ என ஒருவித பதைபதைப்புடனேயே இருக்கவேண்டும்..
ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டும் சிம்புவின் மார்க்கெட் வேல்யூவை உத்தேசித்து, அவர் நல்லவர், வல்லவர் என சர்டிபிகேட் கொடுத்து தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்வதும் நடக்கிறது.. ஆனால் அப்படி சான்றிதழ் கொடுத்தவர்களையே சிம்பு பதம் பார்ப்பது தான் அவரது ஸ்டைல் என்பது மீண்டும் இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.
இப்போது சிம்புவின் கையில் சிக்கிக்கொண்டு படாதபாடு படுகிறாராம் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘ஏஏஏ’ படத்தை தயாரித்துவரும் மைக்கேல் ராயப்பன் ஏற்கனவே சொன்ன பட்ஜெட்டுக்கு அதிகமாக காசை கொட்டியுல்லாராம்.
இப்போது இன்னொரு பாட்டு ஒன்றை வலுக்கட்டாயமாக திணித்து அதை படமாக்கவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம் சிம்பு. இயக்குனருக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் தயாரிப்பாளரிடம் இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார். ஆனால் இனி ஒரு பைசா தரமுடியாது என கறாராக சொல்லி விட்டாராம் மைக்கேல் ராயப்பன்.
இந்த விவகாரம் சிம்புவின் காதுக்குப்போக, ‘ஓஹோ அப்படியா விஷயம் என கருவிய சிம்பு, படம் வரும்போது, இந்தப்படத்தை பார்க்காதீர்கள் என தனது ரசிகர்களிடம் சொல்லப்போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக்கொண்டு வருகிறாராம். சம்பந்தப்பட்டவர்களோ அட இதுகூட இன்னொருவிதமான சிம்புவின் பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான் என நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம்..