“திமிரு பத்தி பேசாதீங்க” ; ஸ்ரேயா ரெட்டியை மடக்கிய இயக்குனர்..!


கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப்பின் ‘அண்டாவ காணோம்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி. பொது கதாநாயகிகளை பொறுத்தவரை ஒரு வெயிட்டான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டு வாங்கிவிட்டால் அடுத்து கதைசொல்ல வரும் இயக்குனர்களிடமும் அதே டைப்பில் கேரக்டர் இருந்தால் சொல்லுங்கள் என வர்புருத்துவஹு வழக்கம் தான்..

ஸ்ரேயா ரெட்டி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன..? அண்டாவ காணோம் படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் வேல்மதி, தன்னிடம் கதைசொல்ல வந்தபோது, இந்தப்படம் திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டாராம். அதற்கு இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு “திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்… நீங்க ஒண்ணும் இதுக்காக முன்கூட்டியே தயாராக வேண்டாம், நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாங்க”ன்னு சொல்லிட்டாராம்..