பேச்சு ஒன்று செயல் ஒன்று ; பிரகாஷ்ராஜின் இரட்டை முகம்..!


தற்போது தமிழ்சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரும் விதமாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு அம்சமாக ஒரு தயாரிப்பாளரின் சிரமத்தை எந்த வகையில் எல்லாம் குறைக்கமுடியும் என்கிற ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒரு படத்தில் நடிகர்களின் சம்பளத்தை அடுத்து அவர்களின் உதவியாளர் வட்டத்திற்கு செலவழிக்கப்படும் தொகை ரொம்பவே அதிகம் என்கிற குற்றச்சாட்டு பல தயாரிப்பாளர்களிடமும் இருக்கிறது.

நயன்தாராவுடன் உடன் வரும் உதவியாளர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் தயாரிப்பாளர் செலவுசெய்ய வேண்டி இருக்கிறதாம். அவ்வளவு ஏன் நடிகர் பிரகாஷ்ராஜின் உதவியாளர்களுக்கு மட்டும் தினசரி 6௦ ஆயிரம் ரூபாய் தயாரிப்பாளரின் கைக்காசு செலவாகிறதாம்.

இதில் என்ன கொடுமை என்றால் தயாரிப்பாளர்களின் செலவை குறைக்கவேண்டும் என நடக்கும் மீட்டிங்கில் முதல் ஆளாக கலந்துகொண்டு குரல் கொடுப்பவரும் இதே பிரகாஷ்ராஜ் தானாம். அந்தவிதமாக இந்தவிஷயத்தில் பிரகாஷ்ராஜ் இரட்டை முகம் காட்டுவதை பார்த்து உடன் இருப்பவர்களே நக்கலாக சிரிக்கிறார்களாம்.

இந்தநிலையில் நடிகர் சூர்யா, தான் நடிக்கும் படங்களில் தான் சம்பந்தப்பட்ட தனது உதவியாளர்களின் செலவு, சம்பளத்தை தானே பொறுப்பேற்று கொள்வதாக அறிவித்துள்ளாராம். அவரை தொடர்ந்து கார்த்தி, விஷால் ஆகியோரும் சூர்யா வழியில் இறங்கியுள்ளனர்.. இதேபோல அனைத்து நட்சத்திரங்களும் இப்படி தங்கள் உதவியாளர்களின் செலவுகளை தாங்களே பார்த்துக்கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் மிச்சமாகும் என சொல்லப்படுகிறது.