விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓரளவு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்துள்ளது.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் தங்களுக்குள் புறணி பேசிக்கொண்டு, கோபதாபங்களையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாக காட்டி வருவதால் பார்வையாளர்களுக்கு ஓரளவு ஆர்வம் ஏற்படவே செய்கிறது..
ஆனால் இதுமட்டும் போதாது என நினைத்த நிர்வாகம் இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த சில டகால்டி வேலைகளில் மறைமுகமாக இறங்கியுள்ளதாம். அதன் விளைவுதான் சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் சினேகனின் கார் அடித்து நொறுக்கப்பட்டதாக வெளியான தகவலாம்..
அதேபோல இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ரைஷா என்பவரின் ஆபாச வீடியோ என்கிற பெயரில் இணையத்தில் ஒரு வீடியோ உலா வர ஆரம்பித்தது,.. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ரைஷா இல்லையாம்.. அவரைப்போலவே தோற்றமுடைய வேறு ஒரு பெண்ணின் வீடியோவாம்
இப்படி ஏதாவது பரபரப்பை தூண்டினால் தான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு இன்னும் அதிக பார்வையாளர்களை இழுக்க முடியும் என்பதால் தான் இது போன்ற செய்திகள் வேண்டுமென்றே பரப்பப்படுகின்றன என்று சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்..