விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிரபல இயக்குநர்


விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்.

படத்தை வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். இவர் லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவியாளர்.

மேலும் விஜய் சேதுபதியுடன் விவேக் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ’என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுதவிர ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன் போன்ற வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார்.