இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்?


தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. அளவெட்டி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க விரும்புவதாகத் யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

நடிகர் சூர்யா நடித்து விரைவில் திரைக்கு உள்ள சூரரைப்போற்று திரைப்படமும் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி படம் எடுத்தால் அதில் நடிக்க நடிகர் தனுஷ்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

எனவே இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக உள்ள திரைப்படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.