தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் தமிழில் வெற்றிப்படமாக அமைந்தது. தனது புதிய படத்தை தமிழகத்தில் விளம்பரம் செய்வதற்காக மகேஷ் பாபு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா, கார்த்தி, யுவன் சங்கர் ராஜா போன்றோருடன் சென்னை லயோலா கல்லூரியில் தான் படித்த கல்லூரி கால அனுபவங்களை அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
பேட்டியின் இடையே ஸ்பைடர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ், விஜய், மகேஷ் பாபுவுடன் இணைந்து பணிபுரிய சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு உங்கள் பதில் என்ன என தொகுப்பாளர் கேட்க, நடிகர் மகேஷ்பாபு கூறியதாவது,
“தளபதி விஜய்யுடன் இணைந்து பணி புரிவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். நல்ல இயக்குநர், சிறந்த கதை அமைந்தால் நிச்சயம் பண்ணலாம்” என்றார்.
மேலும் அந்தப் பேட்டியில் உங்களுக்குப் பிடித்த இயக்குனர் யார் என்று கேட்க சிறிதும் தாமதிக்காமல் நடிகர் மகேஷ்பாபு இயக்குனர் ஷங்கர் சார் என்று கூறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தை முன்னதாக விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால், கால்ஷீட் காரணங்களுக்காக அந்த கூட்டணி உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.