ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பு வரை விஜய் அவ்வப்போது அரசியல் பஞ்ச் வசனங்கள் பேசி வந்தார்.. அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து விடவேண்டும் என அவரது தந்தையும் ரசியக்ர்களிடம் தூபம் போட்டு வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் ரஜினி மட்டுமல்ல, கமலும் சேர்ந்து அரசியலுக்குள் வந்துவிட்டார்கள்.. ஆகவே இனி அரசியல் களத்தில் விஜயக்கு வேலை என்பதும் இல்லை.. அதுமட்டுமல்ல, இதுவரை இவர் அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்பது குறித்து அவராகவும் எதுவும் கூறவில்லை. தானுண்டு, தன் படம் உண்டு என நடிப்பை கவனித்துக்கொண்டு, சினிமாவில் அடுத்த ரஜினியாக முயற்சித்து வருகிறார்.
இந்தநிலையில் தான் மதுரை விஜய் ரசிகர்கள் பரபரப்பான போஸ்டர் ஒன்றை அடித்து ஊரெங்கும் ஓட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் வரும் ஜுன் 22ம் தேதி தனது பிறந்தநாளன்று அரசியல் வருகை குறித்து விஜய் முடிவு எடுக்கிறார் என்று அச்சிடப்பட்டுள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோல் ரசிகர்கள் போஸ்டர் அடித்து இருப்பது விஜய்க்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.