ஹெல்மெட்-கர்ச்சீப்பை கேடயமாக்கி எஸ்கேப் ஆன ‘முரட்டுக்குத்து’ ரசிகர்கள்..!


கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் ட்ரெய்லரும், ஒரு நிமிட வீடியோவும் ரசிகர்களின் ஆவலை தூண்டி விட்டுள்ளன. தியேட்டர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹவுஸ்புல் ஆகியுள்ளது சினிமா துறையில் இருப்பவர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

ஆனால் படம் முழுவதும் ஆபாசம் இருப்பதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர். இதனாலேயே இந்தப்படம் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது… இந்தப்படம் பார்க்கவந்த சில ரசிகர்கள் படம் முடிந்து வெளியே வரும்போது மீடியாக்கள் முன் தங்கள் முகத்தை காட்ட வெட்கப்பட்டுக்கொண்டு ஹெல்மெட்-கர்ச்சீப்பால் கேடயமாக்கி எஸ்கேப் ஆன சுவாரஸ்ய நிகழ்வுகளும் சில தியேட்டர்களில் நடந்தன.