தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி அமலாபால் அதன் பிறகு தொடர்ந்து தெய்வத்திருமகள் வேட்டை காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இவர் விஜயுடன் இணைந்து தலைவா திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
தற்போது அமலாபால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார். நாளை மாலை இவரது இறுதி சடங்குகள் கேரளாவில் உள்ள குறுப்பம்படி என்னும் ஊரில் நடைபெற இருக்கிறது.