வழக்கமாக விஜய் படங்களின் டைட்டில் அறிவிப்புகள் எல்லாம் பயங்கர பில்டப்புடன் தான் அறிவிக்கப்படும்.. அதற்குள் ரசிகர்களை மண்டைகாய வைத்து, அவர்களாகவே பல டைட்டில்களை யூகம் பண்ணி, டிசைன் பண்ணி சோஷியல் மீடியாக்களில் கதறக்கதற உலாவவிடும் கூத்தெல்லாம் அரங்கேறியபின் தான் படத்தின் உண்மையான டைட்டிலே அறிவிக்கப்படும்.
தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லீ டைரக்சனில் விஜய் நடித்துவரும் படத்துக்கும் மூன்று முடிச்சு, காக்கின்னு ஏதோ ஒரு பெயர் வைக்கப்போகிறாங்கன்னு வழக்கம்போல ரசிகர்களை உசுப்பேத்திவிடுற வேலையும் ஒருபக்கம் நடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு.
இப்ப டைட்டிலை முடிவு பண்ணிட்டதாகவும் அத பயங்கர பில்டப்போட அறிவிக்கலாம்னும் விஜய், அட்லீ ரெண்டு பெரும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, “இதுல எப்படிண்ணே எரியும்” என செந்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டை காலி பண்ணிய கதையாய், ஒரு பேட்டியின்போது, “விஜய் நடிக்கும் தாறுமாறு படத்திற்கு இசையமைக்கிறேன்” என தெரிந்தோ தெரியாமலோ டைட்டிலை உளறிக்கொட்டி விட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
இதனால் ஆரவாரமாக டைட்டிலை அறிவிக்கலாம் என ஒரு வாரமாக திட்டம் தீட்டிவந்த அட்லீயும், விஜய்யும் அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.