கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி படி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய ‘பாகுபலி-2’ படத்தை பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள். திரையுலக பிரபலங்கள் கூட போட்டிபோட்டுக்கொண்டு படத்தை பார்த்தார்கள். அப்படி இருக்கையில் நடிகை கௌதமியிடம் ‘பாகுபலி-2’ படம் பற்றி உங்களது கருத்து என்ன சிலர் கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த கவுதமி “முதலில் எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் இதுவரைக்கும் பாகுபலி-2 படம் பார்க்கவில்லை. அந்த நேரத்தில் என்னுடைய மகளுக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக ஒரு மாதம் மகளுடன் தங்கிவிட்டேன். அவள் இல்லாமல் இதுவரைக்கும் நான் எந்தப் படமும் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளாராம்.